மதங்கள் எதுவாயினும் மக்கள் அடிப்படைவாதிகளை இனம் காண வேண்டும்.தவிர,முஸ்லிம்களை அடிப்படை வாதத்துக்குள் தள்ளிவிட எத்தனிக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (24) நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுக்கான கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இஸ்லாம்,பெளத்த மற்றும் பிற மதங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கலாம்.ஒரு காரணத்தில் வேறு வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம்.அதற்காக முஸ்லிம்களைத் தாக்குவதோ,அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிப்பதோ,கொலை செய்வதோ கூடாது.முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கான பதில் பெளத்த அடிப்படைவாதமல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீனும் இங்கு உரையாற்றினார்.
DC

0 comments :
Post a Comment