ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

பைஷல் இஸ்மாயில் –

ஹிஜ்ரி 1435 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு சனிக்கிழமை மஃரிப்தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

புனித ரமழான் நோன்பை தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.30 மணிதொடக்கம் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்புபெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 0777 316415 மற்றும் ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறுகொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக் கொள்கின்றார்.

உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள,ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்ததலைப்பிறை தீர்மானிக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :