நீண்டகாலமாக மாநகர சபையில் சுகாதார ஊழியர்களாக கடமையாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே சுகாதார ஊழியர்கள் இந்தப் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கல்முனை மாநகர மேயர் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இந்த விடயம் தொடர்பில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ரியாகத் அலியிடம் வினவியபோது, எவ்வித முன்னறிவித்தலும் இன்றி சுகாதார ஊழியரகள் இந்த பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
உரிய நடைமுறைக்கு அமைவாக மகஜரை கையளிக்குமாறு சுகாதார ஊழியர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ள சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் கல்முனை மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார் இதேவேளை, கல்முனை மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் பிரதேசத்தில் குப்பை கூழங்கள் அகற்றப்படாதுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment