த.நவோஜ்-
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அலுவலகத்தை வாகரை அம்பந்தனாவெளிக் கிராமத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாகரை பிரதேச அமைப்பாளரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பேர்டிபெரேரா, மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளர் பொ.ரவீந்திரன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் சந்திபால, மாவட்ட மகளீர் அமைப்பின் தலைவி திருமதி.ஞானபாஸ்கரன் ருத்திரமலர், மீள்குடியேற்ற அமைச்சரின் மகளீர் மேம்பாட்டு அதிகாரி விஜிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொண்டவர்களுக்கான கட்சி அங்கத்துவ அட்டைகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment