எஸ்.சிவகாந்தன்-
பதுளை நாராங்கலை தோட்டத்தின் நாராங்கலை பிரிவின் எட்டு தொழிலாளர் குடியிருப்புக்கள் நேற்றைய தினம் 24.06.2014திகதி இரவு 10.00 மணியளவில் தீ ஏற்பட்டு பலத்த சேதத்திற்குள்ளாகின. இத் தீ தோட்ட தொழிற்சாலைக்கான மின்னிணைப்பில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கே காரணமென்று ஆரம்ப விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இத் தீ விபத்து தொடர்பாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஸ்தலத்திற்கு உடனடியாக விஜயம் செய்து நிலமையை அவதானித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருபத்தி நான்கு மணித்திலாயத்திற்குள் தற்காலிக வீடுகளை அமைப்பதற்கு தோட்ட நிர்வாகத்திடமிருந்து காணியை பெற்றுக்கொடுத்ததுடன் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தேவையான கூரைத்தகடுகளையும் உடனடியாக பெற்றுக் கொடுக்க மாகாண அமைச்சர் உத்தரவிட்டார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உலர் உணவு, சமைத்த உணவு ஆகியவைகளை உடனடியாக வழங்கவும், கந்தெகெடிய பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.
அத்துடன் மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிதிய பணிப்பாளர், ஊவா மாகாண சமூக சேவை அமைச்சின் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோரை உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து, தீயினால் பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மேலும் தேவையான உதவிகளை வழங்கும்படி, மாகாண அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களைப் பணித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாடசாலையில் தங்கியிருப்பதனால், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அமைச்சர் கவனத்திற்கு எடுத்து ஒரு நாள் மட்டும் பாடசாலையில் தங்க வைப்பதுடன் மறுதினம் தற்காலிக குடியிருப்புகளில் குடியிருப்பதற்கும் ஏற்பாடுகளை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளின் நன்மை கருதி அவர்களுக்கான கற்கை உபகரண தொகுதிகள், பாதனிகள்; மற்றும் உடைகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளையும் பெற்றுக்கொடுக்க அமைச்சர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட ஏழு வீடுகளிலும் அனைத்து பொருட்களும் தீக்கரையாகிருப்பதும்; குறிப்பிடத்தக்கது. மேற்படி அனைவரும் நித்திரையிலிருக்கும் போதே இத் தீ விபத்து ஏற்பட்டதனால், அங்குள்ள மக்களுக்கு எந்தவொரு பொருளையும் எடுத்தச் செல்ல முடியாமல் வெருமனே உடுத்த உடைகளுடன் வெளியேறினர். இத் தீ விபத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment