செங்கலடி டினேஷ்,எம் ரீ எம் பர்ஹான்
சுவாமி விபுலானந்தர் அவர்களின் நினைவு தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்புகல்லடி கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் ஏற்பாடுசெய்திருந்த பட்டமுன் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கு பற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டி மிகப்பிரமாண்டமான முறையில் சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில்வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.கிட்ணன் கோவிந்தராஜா பிரதமவிருந்தினராக கலந்து கொண்டதுடன், அதிதிகள் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள்நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள்நிறுவக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஏ.ஜே.கிறிஷ்டி உட்பட விரிவுரையாளர்கள் மற்றும்மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு SVIAS நல்லுறவு, SVIAS சேலஞ்சர்ஸ், SVIAS உயரத்தில், SVIAS சந்தம், SVIAS உருவாக்கம் ஆகிய அணிகளுக்கிடையே கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது.
இதன்போது முதலாம் இடத்தை SVIAS CHALLENGERS அணியினரும், இரண்டாம் இடத்தை SVIAS RHYTHMS அணியினரும் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கேடயம்என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியில் SVIASஇன் ஞாபகார்த்த கிண்ணங்கள் அணுசரனைவழங்கியவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு உதவி செய்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பாட்டுக்குழுவினரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment