ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
ஹிஜ்ரி 1435 புனித றமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று சனிக்கிழமை மஃரிப்பு தொழுகையின் பின் பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடியது. நாட்டின் பல பாகங்களிலும் றமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதால் இன்று ம.ரிப்பிலிருந்;து றமாழன் நோன்பு ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் மத்ராஸாவின் அதிபர் ஏ.டபிள்யூ.எம்.றியாழ் மௌலவி இதனை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறிவிப்பதை படத்தில் காணலாம். அகில இலங்கை ஜம்மியத்;துல் உலமா சபை தலைவர் அஸ்ஷெய்க் றிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எச்.எம்.ஸமீல், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிறைக்குழுவினர், உலமாக்கள், பள்ளிவாசலிகளின் நிருவாகிகள், உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment