பொது பல சேனாவின் காடைத்தனமான செயல்கள் மிகவும் மனவருத்தம் தருகிறது- கண்டிக்கிறார் ஹரீஸ் MP


எஸ்எல்எம்-

பொ
றுமைக்கும் எல்லை இருக்கிறது அதனை மீறும் போது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாததொரு சந்தர்ப்பம் வந்துவிடவும் வாய்ப்பு ஏற்படும், அந்த நிலைதான் இன்று இலங்கையில் பொதுபல சேனா என்னும் ஒரு இயக்கம் சட்டம்பித்தனமாக நடந்துகொள்கிறது.

இன்று கல்முனையில்“திவிநெகும” சமுதாய அடிப்படை வங்கி திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

இன்று இலங்கையில் கடந்த 30 வருட யுத்தம் முடிந்த பின்னரான நின்மதியான வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப முற்படும்போது அடுத்ததொரு இனக்கலவரம் வந்து விடுமோ!! நாட்டில் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனை அரசாங்கம் அவசரமாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அண்மையில் மன்னார் மக்களின் குடியிருப்புக்குள் நுளைந்த பொதுபல சேனாவினரின் அடாவடித்தனம் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரை பகிஷ்கரிக்கத் தீர்மாணித்துள்ளோம் இதற்காக அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இன்று நாட்டில் முஸ்லிம், சிங்களம், தமிழ் கிறுஷ்தவ மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் மக்களை வெறுப்படையச் செய்யும் பொதுபல சேனாவினரின் செயல்களை அரசு கண்டுக்கவும் கண்டிக்கவும் வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

மியன்மார் நாட்டில் ஏற்பட்ட இரத்தக்களறி போன்று இலங்கையிலும் ஒரு நிலையை ஏற்படுத்த பொதுபல சேனா போன்ற கடும்போக்குவாத அமைப்பு முற்படுவதை மனிதாபிமானமும், சுதந்திரமாகச் சிந்திக்கக்கூடிய எவராலும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :