மட்டக்களப்பில் கருணாவின் பதாதையின் மீது இனம் தெரியாத நபர்களினால் சேதம் - படங்கள்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19-04-2014 சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சரும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இப் பதாதையில் சரித்திர நாயகனே , சமாதான கர்த்தாவே ,தொடரட்டும் உன் அரசியல் பணி ... என குறிப்பிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கைலாகு கொடுக்கும் புகைப்படத்தோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இதில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முகம் உள்ளிட்ட பகுதி இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :