துபாயின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைக்க தயாராகும் சவூதி அரேபியா ..!

துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் தான் இதுவரை உலகத்திலேயே கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடமாகும். 

இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு உயரமான கட்டிடத்தை கட்ட சவுதி அரேபிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. அக்கட்டிடத்திற்கு தற்போது கிங்டம் டவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

"அடுத்த வாரம் கட்டுமான பணிகள் துவங்க உள்ள இக்கட்டிடமானது அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 3280 அடி உயரத்தில் கட்டப்பட உள்ளது. 200 மாடிகளை கொண்டு கட்டப்படும் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க சுமார் 1.23 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 5.7 மில்லியன் பரப்பளவில் கட்டப்படும் இக்கட்டிடப்பணியில் 80000 டன்கள் இரும்பு பொருட்கள் பயனனபடுத்தப்பட உள்ளன.

இக்கட்டிடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இக்கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தால் செங்கடல் முழுவதையும் காணலாம் "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடம் தற்போதைய உலக சாதனை கட்டிடத்தை விட 568 அடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :