முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி. பி, ஹெல உறுமய, ஐ, தே.க. ஒன்றுபட்டன ..!

கெ
சீனோ எந்த வகையில் செயற்படுத்தப்பட்டாலும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த கெசீனோ பௌத்த மதத்திற்கு, இஸ்லாமிய மதத்திற்கோ ஏற்புடையது அல்லவென முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனையில் சொல் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் மாற்றப்படவில்லை.

எனவே, விவாதத்தின் போது தமதுகட்சி அதில் பங்கேற்கப் போவதில்லை என்று ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார் ..

இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து கொண்டு கோஷமெழுப்புவோர், கெசினோ தொடர்பாக மூன்று வர்த்தமானிகளுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என்றும் ஜே.வி.பி. கோரியுள்ளது.

கட்சியி;ன் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது கட்சியை பொறுத்தவரை கெசீனோ தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார.


இதற்கிடையில், புதிய சட்டமூலத்தில் கெசீனோ தொடர்பான எந்தவிடயங்களும் குறிப்பிடப்படவி; ல்லை.

எனினும், இந்த திட்டத்தில் முதலிடுவோர் கெசீனோவுடன் தொடர்புடையவர்களாக இருப்பலாம் அது தொடரபில் ஜாதிக ஹெலவுறுமய அவதானத்துடன் இருக்கும் என்று அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் குறித்த திட்டத்தின் கீழ் கெசீனோ திட்டம் சேர்க்கப்படுமாயின் அதற்கு எதிராக செயற்படவேண்டி இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரையில் கெசீனோவை இந்த நாட்டில் சட்ட மயமாக்குவதை எதிர்ப்பதாக கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த கெசீனோ யோசனையின் அனுமதி தொடர்பாக பிரச்சினைகள் இருக்கின்றன.

இது தொடர்பில் விவாதம் இடம்பெறும் இரண்டு நாட்களிலும் விரிவாக வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி விவாதத்தின் போது எதிர்த்து வாக்களிக்கும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :