அம்பாந்தோட்டை என்பது ஒர் விடுவிக்கப்படாத பிரதேசமாகும் - சரத் பொன்சேக்கா பிரகடனம்

ம்பாந்தோட்டை ஓர் விடுவிக்கப்படாத பிரதேசமொன்று என ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டில் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு விஜயம் செய்யும் போது நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.

விமான நிலையத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின், அது விமான நிலையமன்று. போதைப் பொருட்கள் கடத்தும் ஓர் இடமாகும்.

அம்பாந்தோட்டையில் துறைமுகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அது கள்ளக் கடத்தல் இடம்பெறும் ஓர் இடமாகும்.

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எதிர்நோக்க நேரிட்ட துர்ப்பாக்கிய சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

எனவே, அம்பாந்தோட்டை என்பது ஒர் விடுவிக்கப்படாத பிரதேசமாகும்.

அம்பாந்தோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இந்த நாட்டின் ஆட்சியாளர் இருக்கின்றார் என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :