என் அப்பாவுக்கு வேலை தாங்க : ஒபாமாவின் மனைவியிடம் திடீர் கோரிக்கை விடுத்த சிறுமி



மெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா வெள்ளை மாளிகையில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

மாணவிகளுடன் அவர் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தபொது, ஷேர்லோட்டி பெல் என்ற 10 வயது சிறுமி, திடீரென மிச்செலி, ஒபாமாவின் அருகில் வந்து,”தன்னுடைய தந்தை மூன்று வருடங்களாக வேலையின்றி தவிப்பதாகவும், அவருக்காக நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கூறி தனது தந்தையின் பயோடேட்டாவை மிச்செலி, ஒபாமாவிடம் கொடுத்தார்.

ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த மிச்செலி, அந்த பயோடேட்டாவை வாங்கி கண்டிப்பாக அந்த சிறுமியின் தந்தைக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி, அந்த சிறுமியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் அந்த இடமே சிறிது நேரம் மவுனமாக காணப்பட்ட்து.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிச்செலி, தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் சிறுமியின் தந்தைக்கு வேலை கிடைக்க முயற்சி செய்வேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :