நஸீப் முஹம்மட்-
மட்டக்களப்பு தாண்டவன்வெளி ரெலிகொம் சந்தியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்தனர்.மோட்டார் பைசிக்கிளில் பிரையாணம் செய்துகொண்டீருந்தபோது சிறு உழவுஇயந்திரத்தில் மோதுப்பட்டு கட்டுப்பாடடை இழந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டீருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதினால் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஓட்டமாவடியைச் சேர்ந்த முகமட் நஸீர் வயது (24) என்பவரே வலதுகால் உடைந்த நிலையில் சத்திர சிகிட்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதிப் போக்குவரத்து பொலிசார் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக் வழமையான பாதுகாப்பு கடமையில் இருந்த சந்தியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


0 comments :
Post a Comment