கனடாவில் புதிய வகை பக்டீரியாவைக் கண்டுபிடித்து சாதித்து காட்டிய 18 வயது மாணவி



னடாவின் மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரியின் 18 வயது மாணவியான நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் பின்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.

இந்த இளம் விஞ்ஞானி (Pseudomonas fluorescens) சுடோமோனாஸ் வுளோறசென்ஸ் என்ற பக்டீரியாவின் ஒரு குறிப்பிட்ட திரிபு அவரது கொல்லைப்புறத்தில் வேரிடுவதை கண்டுபிடித்துள்ளார்.

இந்த பக்டீரியா உயிர்மகட்டுப்பாடு முறையில் (அதாவது எண்ணெய்கசிவுகளை கட்டுப்படுத்தும் கரிம தீர்வுகள்) பயன்படுத்தப்படுகின்றது.

மண் மாதிரிகளில் காணப்படும் ஏதாவது ஒரு பக்டீரியாவில் இத்தகைய எண்ணெய் உட்கொள்ளும் திறன் இருக்கின்றனவா என தான் பார்க்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு இந்த 18-வயது மாணவியை எதிர்வரும் மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் இடம்பெறவிருக்கும் இன்ரெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சிக்கு இறுதிப் போட்டியாளராக எடுத்துச் செல்கின்றது.

எனது திட்டம் எண்ணெய்க் கசிவை சுத்தப்படுத்த ஒரு சுற்றச் சூழலிற்கு ஏற்ற தீர்வாக அமைய வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டது.

முக்கிய தூண்டுகோல் தண்ணீர் மாசுபடுதல் எனவும் இன்று நாம் எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சனை தண்ணீர் மாசுபாடு எனவும் தெரிவித்துள்ளார்.

தான் கண்டுபிடித்த இந்த பக்டீரியா தனித்துவமானதா? இதற்கு முன்பு கண்டு பிடிக்கப்படாததா? என்பதை தன்னால் சொல்ல முடியாதெனவும் டிஎன்ஏ வரிசை முறை கண்டுபிடிப்பிற்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதே நேரம் இவரது ஆய்வுகூட மேலதிகாரிகள் ஆய்வு கூடத்திற்கு இது ஒரு புதிய பக்டீரியாவென தெரிவித்துள்ளனர்.

நிவேதா மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறையில் ஆராய்ச்சியை தொடர விரும்புகின்றார்.

இவரது தாயார் றமணி தனது மகளின் சாதனைகள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றில் அவளது தெரிவுகளையிட்டு தான் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :