இ
ன்றைய முஸ்லிம் சமூகத்தின் அவசர ஆவணமாக்களுக்கு அரசைவிட -அரசியல் வாதிகளின் பேதமற்ற இரகசிய ஒத்துழைப்பு மிக அவசியம்
!!! -
இம்போர்ட்மிரர் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் அரைகூவல்.
"எம் தொல்லியல் றீதியிலான ஆய்வு முயற்ச்சிக்கு அரச பலத்தை விட ; அரசியல் வாதிகளின் பலம்தான் அதிகம் பிரயோகிக்க வேண்டியுள்ளது என்பது என் கருத்து. இக் கருத்தினை ஒட்டியவாரே எம் இம்போர்ட் மிரர் ஊடக செய்திச் சேவை நிருவனத்தையும் வழிநடாத்திச் செல்லவுள்ளோம்". என்று 24.04.நேற்று தேசகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் - நிறை வேற்றுப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற புதிய கலையக திறப்பு விழா நிகழ்வின் போது ஆளுகை உரையை இம்போர்ட்மிரர் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் - ஊடகவியலாளர். தேசமாண்ய : ஜலீல் ஜீ அவர்கள் ஸ்கைப் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உரையாற்றும் போது மேற்க்கண்டவாறு அரைகூவல் விடுத்தார்.
சர்வதேச இம்போர்ட் மிரர் வானொலியின் புதிய கலையக திறப்பு விழாவைத் தொடர்ந்து அக்கரைப்பற்று தீ.எப்.ஸீ. மண்டபத்தில் இடம் பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திகாமடுல்ல நாடாளுமன்ற பிரதிநிதி.கௌரவ. எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தொடர்ந்தும் இம்போர்ட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் - ஜலீல் ஜீ அவர்கள் உரையாற்றுகையின் போது : "எம் பயணத்துக்கு இவ்விழாவுக்கு வருகை தந்திருக்கும் அரசியல் பிரமுகர்களும் , வருகைதராத பிரமுகர்களும் , புத்திஜீவிகளும் தங்களின் மேலான ஒத்துழைப்பையும் , பங்குபற்றலையும் எமக்கு வழங்க வேண்டியது காலத்தின் அவசிய தேவை என்பதை மறந்துவிட்டாலும் ; மறுத்து விடாதீர்கள்".
"எம் சமூக புராதண வரலாற்று தொல்லியல் தடயங்களை ஆவணமாக்கும் தொடர் பயணத்தில் எம்மவர்களின் அடையாளங்களை தொகுத்த அரும்பணியைப் புரிந்த - கௌரவப் பங்காளராக வலம்வர எம்மோடு நீங்களும் கைகோருக்க வாருங்கள் என்று அன்பு கணிந்த அழைப்பாணையை விடுக்கிறேன் " என்றார்.
நிகழ்வில் பிரதம அதிதி உற்பட கெளரவ அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இம்போட் மிரர் மீடியா நெட்வேர்க்கின் ஊடகப்பயண வளர்ச்சிக்கு பங்காற்றியமைக்காக முகாமைத்துவ பணிப்பாளர் சபையினருக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டதோடு இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஆசிரிய பீட உறுப்பினர்கள், இன்னும் பலருக்கும் ஞாபக சின்னங்களும் பரிசில்களும் வழங்கி பாரட்டாப்பட்டனர் அத்தோடு இம்போட்மிரரின் சிறப்புவிழாவுக்கான ஒளியமுதம் சிறப்பு மலரும் பிரதம அதிதினால் வெளியிடப்படமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் , ஊடகவியலாளர்கள் , கல்விமாண்கள் , பிரபல இலக்கியவாதிகள் , புகழ்வாய்ந்த அறிவிப்பாளர்கள் , கவிஞர்கள் , பாடகர்கள் , இசைக் கலைஞர்கள் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் , இராப்போசன விருந்துபசாரத்துடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment