பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு 'கல்குடா மீடியா போரம்'; கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பதுரியா-மாஞ்சோலை அஸ்-ஸபா பாலர் பாடசாலைக்கு நீர்சுத்திகரிப்பு இயந்திரத்தை 24-04-2014 இன்று வியாழக்கிழமை அன்பளிப்பு செய்தது.
அஸ்-ஸபா பாலர் பாடசாலை ஆசிரியை ஜனாபா ஜஹராவீவீ தலைமையில் இடம் பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர்,கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ,மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளாருமான எம்.ரீ.எம்.பாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் பாடசாலை ஆசிரியையிடம் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
.jpg)
0 comments :
Post a Comment