ஞானசார தேரரின் சவாலுக்கு நெத்தியடி அடிக்க அமைச்சர் ஹக்கீம் தயார் ..!



ழுங்காக நெறிப்படுத்தப்பட்டு, வார்த்தைப்பிரயோகங்களில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் நேரில் எந்த இடத்திலும் விவாதத்திற்கு முகம்கொடுக்க முடியும்.

தற்போது தோற்றமேடுத்துள்ள முஸ்லிம் விரோத போக்கு குறித்து பேசப்பட்டாக வேண்டும். பெரும்பான்மை சமுகத்த்தினரின் மத்தியில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான விசமப் பிரச்சாரங்களை விதைக்கும் அணியினரின் விவாதத்திற்கான சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.

நடுநிலை வகிக்கும் ஊடகமொன்று, மிகவும் பொருத்தமான மத்தியஸ்தர்களுடன் நேர்மையாக இவ்விவாதத்தை நடத்த ஒழுங்குகளை மேட்கொள்ளுமாயின் ஞானசாரரின் சவாலை சந்திக்க தான் தயார் என்று ரவூப் ஹகீம் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாக பிரபல சிங்கள தினசரியான "மவ்பிம" தெரிவித்துள்ளது.

விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் அமைப்பினரின் நடத்தை, வார்த்தைப்பிரயோகங்கள் என்பனவற்றை கருத்தில் எடுத்து நோக்கும்போது அவர்கள் ஒரு நேரடி விவாதத்தின்போது ஒழுக்கசீலர்களாக நடந்துகொள்வார்களா என்கிற பலமான சந்தேகம் எழுகிறது.

நாட்டின் பெரும்பான்மை முஸ்லீம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியொன்றின் தலைவர் என்கிற ரீதியில் மிகவும் பொறுப்புணர்வுடனும், பொறுமையுடனும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்ததாக வேண்டும், அதேவேளை தீவிரவாத நோக்கங்களுடன், ஒரு இனமுறுகளை தோற்றுவிப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ள குழுவினருடன் நேரடி மோதலில் இறங்கும்போது அதன் எதிர்விளைவுகள் குறித்த எச்சரிக்கையுடன் மிகவும் சாதுர்யமாக நிலைமைகளை கையாள வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. அதனால்தான் சங்கைக்குரிய மகாநாயக தேரர்மாரை கண்டியில் சந்தித்து இதுபற்றி விளக்கமாக பேசியுள்ளேன்.

நூற்றாண்டுகாலம் பழமை மிகுந்த பௌத்த - முஸ்லிம் உறவுகளில் விரிசல்களை உண்டுபண்ணாதவிதமாக மிகவும் பொறுமையுடனும் புத்திசாதுர்யத்துடனும் இவற்றை அணுகுமாறு சங்கைக்குரிய தேரர்கள் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள். நேரடி மோதல்களின் விபரீதம்பற்றி அவர்கள் தெரிவித்த ஆழ்ந்த கவலையையும் தேர்ந்த ஆலோசனைகளையும் இதுவிசயத்தில் நாம் கட்டாயம் கவனத்தில் எடுத்தாக வேண்டியுமுள்ளதாக அப்பத்திரிகையுடனான நேர்காணலில் ஹகீம் மேலும் தெரித்ததாக அச்செய்தி குறிப்பிடுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :