உலக சமாதான அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெமீலுக்கு தென்கிழக்கு கல்விச் சமூகம் வாழ்த்து!




அஸ்லம் எஸ்.மௌலானா-
லக சமாதான அமைப்பின் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களுக்கு தென்கிழக்கு கல்விச் சமூகம் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருதில் அமைந்துள்ள கொம்டெக் நிறுவனத்தில் இடம்பெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக புத்திஜீவிகளின் விசேட சந்திப்பின் போதே இந்த வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதியும் தற்போதைய சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எஸ்.எம்.ஜலால்தீன் மௌலவி, தென்கிழக்கு கல்விச் சமூகத்தின் சார்பில் இந்த வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார்.

எமது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிதா மகன்களுள் ஒருவரான ஏ.எம்.ஜெமீல் அவர்கள் உலக சமாதான அமைப்பின் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் தென்கிழக்கு கல்விச் சமூகத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக ஜலால்தீன் மௌலவி குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களுடனான இந்த சந்திப்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், முன்னாள் பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :