அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு பெரும் அவஸ்தை!

ஏ.எல்.ஜனூவர்-

ட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் ஒருவர் அண்மைக்காலமாக கடமைக்கு சமூகமளிக்காமையினால் வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் தங்களது வைத்திய இரசாயன பரிசோதனைகளை மேற்கொள்ள பெரும் அவஸ்தைப்படுகின்றனர்.

இம் மாவட்ட வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் அயராத முயற்சியினால் பாலமுனை வைத்தியசாலைக்கும், அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கும் சேர்த்து 2009 ஆம் ஆண்டு ஒரு மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் நியமிக்கப்பட்டார்.

இதனைத்த தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு இங்கு கடமையாற்றிய மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளரும் பரஸ்பர இடமாற்றத்தை பெற்றுச்சென்றனர்.

03நாட்கள் அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையிலும், 02நாட்கள் பாலமுனை வைத்தியசாலையிலும் தனது கடமையையாற்ற வேண்டும். இவர் கொஞ்ச நாட்கள் கடமை புரிந்துவிட்டு அண்மைக்காலமாக அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு சமூகமளிப்பதில்லை இதனால் இங்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களும், வெளிநோயாளிகளும் தாங்கள் வெளியில் சென்று பணத்தை கொடுத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இது தொடர்பாக அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை இம்போட்மிரர் தொடர்பு கொண்டு கேட்ட போது,

இங்கு 03 நாட்கள் கடமைக்கு நியமிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் கடமைக்கு வருவதில்லை எனவும் இது பற்றி பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், வேறொருவை நியமித்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் இப்பிரதேச மக்களின் நலன் கருதி உடனடியாக மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் ஒருவரை நியமித்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :