ஏ.எல்.ஜனூவர்-
பொத்துவில் ஹிதாயா நகர் -01, 02, ஆர்.எம்.நகர் மக்களுக்கான நடமாடும் சேவை பொத்துவில் ஹிதாயாநகர் வித்தியாலயத்தில்; பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத் தலைமையில் இடம்பெற்றது. இந்நடமாடும் சேவைக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார்.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாhகண அமைச்சர் பொத்துவில் பிரதேசத்துக்கு செய்யும் அளப்பெரிய சேவையை பாராட்டி பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.வாசித் அவர்களினால் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாசித், உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.முபாறக் மற்றும் அரச உயர் அதிகாரிகளும், திணைக்கள தலைவர்களும்,; பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment