இதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக சேவாக் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா பந்து வீச்சில் சாவ்லா, நரேன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதனை அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா, பஞ்சாப் வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் கொல்கத்தா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

0 comments :
Post a Comment