5 அங்குல நீளமான வாலொன்று வளர்ந்த நிலையில் காணப்பட்ட தனது 5 மாத மகனுடன் தாயொருவர் மருத்துவ உதவி கோரி மருத்துவமனையொன்றை அணுகிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
நுவோ நுவோ என்ற மேற்படி குழந்தைக்கு ஏற்பட்ட முள்ளந்தண்டு பாதிப்பு காரணமாக முள்ளந்தண்டின் அடிப்பகுதியில் ஏற்பட்ட இடைவெளியினூடாக வால் வளர ஆரம்பித்துள்ளது.
ஆரம்பத்தில் மிகச் சிறியதாக காணப்பட்ட அந்த வால் மெல்ல மெல்ல வளர்ச்சியடைய ஆரம்பித்ததால் அச்சமடைந்த தாயார் சாங்ஷா நகரிலுள்ள மருத்துவமனையை அணுகி தனது மகனின் வால் பகுதியை அகற்ற மருத்துவர்களின் உதவியை நாடி அகற்றக் கோரியுள்ளார்.
நுவோ நுவோவின் வால் வளர்ச்சியானது அவனது நரம்புத் தொகுதியுடன் இணைப்பைக் கொண்டுள்ளதால் அந்த வால் பகுதியை அகற்றுவது பாலகனது உயிருக்கு அபாயத்தை விளைவிக்கலாம் என்ற அச்சத்தில் மருத்துவர்கள் பாலகனுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மறுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment