மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு 3918 மில்லியன் ரூபாய் நிதி - படங்கள் இணைப்பு



ஏ.எல்.ஜனூவர்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு 3918 மில்லியன் ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எழுச்சி தேசியத்தின் மூலம் வளமான எதிர்காலம் எனும்
தொனிப்பொருளுக்கமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

மட்டக்களப்புமாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.எம்.சார்ல்ஸ் தலைமையில் விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் இராசதுரை அரங்கில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்துகிராமிய பொருளாதாரத்தை வழுப்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைவிரிவுபடுத்தல், கல்வி, சுகாதாரம் ,சமூக அபிவிருத்திக்கு தேவையான சூழலைஏற்படுத்துவதும், கிராமிய மக்களின் சந்தைப்படுத்தல்களையும்,தேவைகளையும்,
தேசிய பொருளாதாரத்தை பெற்றுக் கொள்ளக்கூடியவாறு உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்புபடுத்துவதக்குமான பொருளாதார அமைச்சின் திட்டத்தின் கீழ் இந் நிதிபயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்டஒருங்கிணைப்பு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மாகாண சபை
உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்,பொருளாதார அமைச்சர் மேலதிக செயலாளர் பண்டார உட்பட உயர் அதிகாரிகளும், அரச திணைக்கள தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :