கசினோவுக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை ..!



மூ
லோபாய அபிவிருத்தி திட்ட வர்த்தமானி பத்திரங்கள் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட போது, அதற்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அரசாங்க உறுப்பினர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.

அமைச்சர் தினேஸ்குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் வர்த்தமானி பத்திரங்கள் நேற்றும் நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதிஅமைச்சர்கள் சிலர் பங்கேற்றிருக்கவில்லை.

ராஜித்த சேனாரத்ன, டிலான் பெரேரா, விமல் வீரவன்ச, ரவுப் ஹக்கீம், ஏ. எல். எம். அத்தாவுல்லா, றிசாட் பதியுதீன், காமினி லொக்குகே ஆகிய அமைச்சர்களும், முத்துசிவலிங்கம், வீரகுமார திஸாநாயக்க ஆகிய பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் இந்த வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

இதன் முதலாவது வர்த்தமானி பத்திரம் மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தின் 46 உறுப்பினர்கள் பங்கேற்காதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விபரங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, அது ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :