ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தேசப் பற்று உண்டு என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனினும், அரசாங்கத்தின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையம் எடுககவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கண்ணை மூடிக்கொண்டு அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்க முடியாது எனவும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் வழி நடப்பதாகவும், நாட்டுக்கு துரோகம் இழைக்கப் போவதில்லை எனவும்; அவர் தெரிவித்துள்ளார்.
எமது பக்க நியாயங்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை இனம் என்ற காரணத்தினால் துரோகி முத்திரை குத்தப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment