பள்ளி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தமை என்பது அப்பட்டமான பொய் : அசாத் சாலி - வீடியோ



க்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நெரின் புள்ளே நேற்று முன்தினம் தெரிவித்த கருத்து தொடர்பில் சிவில் கண்காணிப்பு ஆணைக்குழு நேற்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின்போது (Video) கருத்து தெரிவிக்கப்பட்டது.

வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நெரின் புள்ளே ஜெனிவாவில் தெவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் சிவில் கண்காணிப்பு ஆணைக்குழு உறுப்பினர் அசாத் சாலி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

அசாத் சாலி வெளியிட்ட கருத்து
அவருக்கு நான் சவால் விடுகின்றேன். ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த விடயமானது, அப்பட்டமான பொய்யாகும். வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் யாரையும் இதுவரையில் பொலிஸார் கைது செய்யவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் இல்லை. போலியான B அறிக்கையை சமர்ப்பித்து உடனே பிணை வழங்கும் வகையில் செயற்பட்டனர்.

ஆகவே பிரதி சொலிஸ்டர் ஜெனரலுக்கு சவால் விடுகின்றேன். கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன. எத்தனை பேரை கைது செய்தீர்கள்? எத்தனை பேரை 14 நாட்கள் சிறையில் வைத்தீர்கள்? இதற்கு முடிந்தால் பதிலளிக்குமாறு பிரதி சொலிஸ்டர் ஜெனரலுக்கு சவால் விடுகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :