காணாமல் போன மலேசிய விமானத்தை கடத்தியது விமானி என்பது உறுதியாம் - வீடியோ இணைப்பு


காணாமல் போன மலேசிய விமானம் அதை செலுத்திய விமானி அல்லது விமானிகளால்தான் கடத்தப்பட்டது என்பது உறுதிபட தெரிந்துவிட்டது. MH 370 விமானத்தின் தலைமை பைலட் Zaharie Ahmad Shah, சிறையில் இருக்கும் மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், அவருடைய விடுதலையை கோரிதான், விமானத்தை கடத்தியிருப்பார் என்றும் ஊகிக்கப்படுகிறது. இதனால் மலேசிய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இன்னொரு அதிர்ச்சி செய்தியாக விமானியின் மனைவியும்,மூன்று குழந்தைகளும், விமானம் கடத்தப்படுவதற்கு முந்தைய நாள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.

தற்போது விமானத்தின் பைலட்டுகள் செக்யூரிட்டி முன்பாக நின்று சோதனை செய்த சிசிடிவி கேமரா படங்கள் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் அவர்கள் இருவரும் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் FBI கூறியிருக்கும் தகவலின்படி, 'விமானத்தின் சிக்னல்கள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும், விமானம் தரையில் தற்போது பத்திரமாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளது. விமானத்தை நிறுத்தியிருக்கும் மர்ம இடத்தை அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :