முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முஹமட் சாபி ரஹீமின் செவ்வி

 இக்பால் அலியார்-

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முஹமட் சாபி ரஹீம் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மேல் மாகாண சபை உறுப்பினராக அரசியலில் பிரவேசித்த இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் மாகாண சபை தொடர்பான விரிவான அரசியல் அனுவங்களைப் பெற்றுக் கொண்டார். இவர் நீர் கொழும்பு அல் ஹிலால் வித்தியாலயம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பழைய மாணவராவர்.

வர்;த்தகத்துறையில் ஈடுபாடுடைய இவர் பல்வேறு சமூக அமைப்பக்களில் பங்கு கொண்டு முக்கிய பதவிகளை வகித்துவருகின்றவர். சமூக நல மேம்பாட்டுக்காக அரசியலுக்குள் பிரவேசித்த இவர் தம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக உயிர் மூச்சாக நின்று அர்ப்பணிப்புடன் பெரும் சேவையாற்றியுள்ளார். இரு தடவை மாகாண சபைத் தேர்தலில் வெற்றி கொண்ட இவர் மூன்றாவது தடவையாகவும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுன்றார்.

 இவர் தனியார் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.
நேர்காணல் : - ஆத்தீக் அலி


நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான முக்கிய காரணம் என்ன?
நான் வர்த்தகத் துறையில் ஈடுபாடு காட்டிக் கொண்டிக் கொண்டிருக்கின்ற வேளையில் சமுச சேவை அமைப்புக்களில் ஈடுபாடு உடையவனாக இருந்தேன். எனக்கு அரசியலுக்குச் சென்று சேவை புரிய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்க வில்லை. எனினும் தன்னால் இயன்றளவு தம் சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு இருந்தது. வடமேல் மாகாண சபை உறுப்பினர் நண்பர் நியாஸ் என்னை தேர்தலில் நிற்கும்படி பல விடுத்தம் அழைப்புக்கள் விடுத்தார். 

அவர் அப்போது அழைப்பு விடுக்கும் போது தம் சமூக சேவையை பரந்த மட்டத்தில் செய்தாயின் அது அரசியல் ஊடாதகத்தான் செய்ய முடியும் என்று கூறினார். அப்போது அவர் கூறிய அந்தக் கருத்து என்னுடைய சமூக சேவைப் பணிக்கு வலுவூட்டக் கூடியதாக இருந்தது முஸ்லிம்களுடைய அபிலாiஷகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகத்தான் பெற்றுக் கொள்ள முடியும். 

சமூக, சமய, பண்பாட்டு கலாச்சார விடயங்கள் அடங்கிய அனைத்து வகையிலும் தம்முடைய பங்களிப்பை முழுமையாக ஆற்றுவதற்கு மிக உகந்த கட்சியாக ஸ்ரீ. மு. காங்கிரஸ் கட்சியே விளங்கின. அந்தவகையில் முதன் முதலாக ஸ்ரீ மு. காங்கிரஸ் கட்சியில் 2004 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.. இந்த வெற்றி இலக்கின் ஊடாக முஸ்லிம்களுடைய தனி அடையாளத்தை கம்பஹா மாட்ட மண்ணில் நிலை நாட்டக் கிடைத்தது என்றே கூற வேண்டும். மாகாண சபை ஊடாக எவ்வகையான இலாபங்களை பெற்றுக் கொள்ள முடியுமோ அதனைக் கண்டறிந்து தம் சமூகத்திற்கு கிடைக்கப்பெறக் கூடிய அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. 

கோடிக்கான ரூபா பெறுமதியான பல்வேறு பட்ட சேவைகளைச் செய்துள்ளேன். அது மாத்திரமல்ல எங்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் சபையில் எதிரொலிக்கச் செய்ய முடிந்துள்ளது என்று ஈண்டு குறிப்பிடலாம்.

கடந்த மத்திய , வடமேல் மாகாணத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்து குறைந்துள்ளது என விமர்சனங்கள் உள்ளன. அந்த நிலை ஏற்படுமா அல்லது முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா?
இது மிக நல்ல கேள்வி. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் பிரநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் எவ்வாறு இதனை பாதுகாத்து மேலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு அதிகரிக்கச் செய்யலாம் என்பதைப் பற்றி முஸ்லிம் வாக்காளர்கள் மிக கடுமையாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத் தருணத்தில் உள்ளனர்.

ஸ்ரீ. மு. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது இது முஸ்லிம்களைப் பொறுவத்தவரையில் வரவேற்கத் தக்க விடயம். விகிததாரசத் தேர்தல் முறைப்படி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள இலகுவான வழிமுறையாக இருந்த போதிலும் தேர்தலில் முகம் கொடுக்கவுள்ள முஸ்லிம்களுடைய பிரதேசங்களிலும் வாக்களிப்பு குறித்து முஸ்லிம் மக்கள் மத்தியில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள், மற்றும் புத்திஜீவிகள் பொது மக்கள் எவ்வாறு தங்களுடைய பிரதிதித்துவங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஊட்ட வேண்டிய அவசியம் அவசரமாக இருந்து கொண்டிருக்கிறது.

இன்று ஏற்பட்டுள்ள சமகாலப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதெனில் அரசியல் பிரதிநிதித்தவம் மிக அவசியமாகும். மேல் மாகாண முஸ்லிம் மக்களுடைய இருப்பு அரசியல் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாப்பதன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக மேல் மாகாணத்தில் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை காப்பற்றப்பட வேண்டும். இல்லையேல் மத்திய, வடமேல் மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மலையகத் தோட்டத் தமிழ் மக்களும். 

வட புல மக்களும் அடைந்த அரசியல் வெற்றியை முஸ்லிம் மக்கள் தவறுவிட்டுப் போட்டு இன்னும் கண்ணீர் விட்ட வண்ணம் உள்ளனர்
மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கம்பஹா மாட்டவம் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நீர்கொழும்பு, திஹாரி, பஸ்யால, மினுவாங்கொடை. மஹர. வெலகொட. மல்வானை,, மாபோல வத்தiளை கல்எளிய உள்ளிட்ட42 கிராமப் பகுதிகளில் முஸ்லிம்கள் அங்காங்கே செறிவாக வாழ்கின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் சிறு வியாபாரத் துறைகளிலேய ஈடுபடுகின்றனர். இதனால் இவர்களால் பாரிய முன்னெற்றம் ஒன்றைக் கண்டு கொள்ளவில்லை மிகக் கஷ;டத்திற்கு மத்தியிலேதான் இவர்களுடைய வியாபாரத் துறை இருந்து கொண்டு இருக்கிறது. இங்குள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் மாதாந்த சம்பளத்திற்கு கடைகளில் கூலி வேலைக்கு நிற்பவர்களாகவே இருக்கின்றனர். குறிப்பபாக பொருளாதாரம் கல்வி, குடியிருப்பு, சுகாதாரம், போக்குவரத்து உட்பட பின் தங்கியவர்களாகவே காணப்படுகின்றனர். இந்நிலையிலேயே மாவட்டத்தில் அரசியல் பிரநிதித்துவத்தின் தேவை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பபை உறுதிப்படுத்திக் கொள்ள அரசியல் பிரதிநிதிதுவம் கட்டாயம் தேவை என்பதுடன் அதை உருவாக்கி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி பொறுப்பு, கம்பஹா மாட்ட முஸ்லிம் , வாக்காளர்களையே சாரும். கம்பஹா மாட்ட முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

கடந்த மத்திய வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவும். முஸ்லிம் பிரநிதித்தவங்களை இழக்கச் செய்வதற்காகவும் முஸ்லிம்களை ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் களத்தில் அதிகளவு இறக்கி அதில் வெற்றியும் கண்டது. இவற்றைக் கருத்திற் கொண்டு எமது இருப்பை நாமே உறுதி செய்யும் வகையில் இந்த வாக்குகளை முஸ்லிம்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மிக மிக அவதானத்துடன் கேட்டுக் கொள்கின்றேன்.

முஸ்லிம்கள் இந்த நிலையப் புரிந்து அவதானத்துடன் நடக்க நீங்கள் கூறுகின்ற ஆலோசனைகள் என்ன ?
ஐக்கிய தேசியக் கட்சிதான் முஸ்லிம்களுடைய வாக்குகளை சிதறடிப்பதற்காக கூடுதலான வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கியது. குருநாகல் மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்கள் இருந்தனர் ஆனால் தற்போது ஒரே ஒரு உறுப்பினர் மாத்திரம் உள்ளனர். 

அதே போன்று புத்தளம் மாவட்டத்தில் ஐந்து பேரளவில் இருந்தனர் தற்போது இருவர் மாத்திரமே உள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர் தற்போது இருவர் மாத்திரமே உள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் ஒருவர் இருந்தார் தற்போது அவரும் இல்லை. 

எனவே ஒரு சமூகத்தின் இருப்புக்கான பெறுமதி, அச்சமூகம் பெற்றுக் கொள்ளும் அரசியல் நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதித்துவத்திலேயே தங்கியுள்ளது. கடந்த மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ. முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சி சார்பாக இருந்த பல முஸ்லிம் பிரதிநிதித்தவமும் இழக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியான முஸ்லிம்களுடைய படுதோல்வியாகும். ஒற்றுமையீனமும். பிளவு பட்ட செயற்பாடுகளுமே இதற்கு முக்கிய காரணமாகும்.

விட்டதவறு தொடராமலிருக்க இந்த தேர்தலை முஸ்லிம் சமூகம் மிகுந்த அவதானத்துடன் கையாள வேண்டும் தேவைப்பாடு இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு எங்களிடையே ஒற்றுமை அவசியம். எங்கள் மாவட்டத்தில் எத்தனை முஸ்லிம் வாக்காளர் உள்ளார்கள் என்பதையும் அதன் மூலம் எத்தனை பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியும் என்பதையும் மக்களுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும். 

அத்துடன் முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்புக்களான அகில இலங்கை ஜம்மியதுல் உலமா போன்ற பல ஏனைய சமூக நல அமைப்புக்களின் அரசியல் விழிப்பூட்டல் நடவடிக்கைகளும் கருத்துக்களும் பரிமாறப்படல் வேண்டும். வாசிப்பற்ற எமது முஸ்லிம் சமூகம் என்பதன் காரணமாக எமது சமூகத்தினுடைய ஊடமாகக் கொள்ளக் கூடிய பள்ளிவாசல் மிம்பர் மேடைகளிலும் இது வலியுறுத்திக் கூறப்படல் வேண்டும். இந்நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகம், தமிழ் சமூகம், மலையகச் சமூகம் சிந்தித்து செயலாற்றும் போது எமது முஸ்லிம் சமூகம் மாத்திரம் இது தொடர்பாக இன்னும் சிந்தக்கவில்லை என்ற குறையை இந்த சந்தர்ப்பத்தில் நிவர்த்தி செய்யவதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்று படல் வேண்டும். 

தமக்குரிய அரசியல் பிரநிநிதித்துவ உரிமைகளை நிலைநாட்ட வேண்டி பொறுப்பும் கடமையும் எமது சமூகம் சார்ந்த அனைவருக்கும் உண்டு என்கின்ற உணர்வு எல்லோருக்கும் எழும்பட்சத்தில் எமது முஸ்லிம் பிரநிநிதித்துவங்களை திட்டமிட்ட அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் உறுதியாகக் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
சமகாலப் பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்.


மூன்று தசாப்த காலங்களாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இந்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்கின்ற போதிலும் கூட முஸ்லிம்களை மாத்திரம் நிம்மதியாக வாழ விடக்கு கூடாது என சதித் திட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. பள்ளி உடைத்தல், முஸ்லிம்களுடைய சமய விவகாரங்களில் தலையிடல், முஸ்லிம்களுடைய குடியிருப்புக்களை சுவீகரித்தல் போன்ற இடையூறுகளை கொடுத்து இந்நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியில்லாத சமூகமாக தொடர்ந்து சஞ்லப்பட்டுக் கொண்டிருப்பதற்கு ஏற்ப சில தீய சக்திகளால் சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் இந்த நாட்டையோ இந்த நாட்டினுடைய ஒரு பிடி மண்ணையோ கேட்காமல் போர்க்கால கட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் தியாகங்களையும் பல கோடிக்கணக்கான சொத்து உயிர் உடமைகளை இழந்து இன்னும் அகதி முகாமில் வாழுகின்ற ஒரு சமூகமாகத்தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம். 

இந்த இழப்புக்களையெல்லாம் தாங்கிய முஸ்லிம் மக்களுக்கு நிம்மதியில்லாமலே வாழ்வதற்கு பல்வேறு முனைப்புக்களில் பொதுபல சேன, சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை விளைவித்து வருகின்றனர். ஆனால் இவர்களுடைய தொடர் நடவவடிக்கைகளுக்குப் பின்புலமாக சர்வதேச சக்திகளும். எமது சமூகத்தைச் சர்ந்த காட்டிக் கொடுக்கின்ற சமூக துரோகிகளும், அரசியல் திருவிளையாடல்களும் உள்ளன. நாம் ஒன்றுபடும் பட்சத்தில் இதற்கு நிரந்தரத் தீர்வை கண்டு கொள்ள முடியும்.

நீங்கள் மாகாண சபை உறுப்பினராக இருந்து சாதித்தது என்ன ?
நான் இரு முறை மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பல கோடி ரூபா பெறுமதியான சேவைகளை தம் சமூகம் சார்பாக பலதரப்பட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளேன். அதற்குரிய வரலாற்றுச் சான்றாகளை கம்பஹா மாவட்ட முழுவதும் அடையாளப்படுத்தியுள்ளேன்.

அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்துள்ளீர்கள்.?
என்னுடைய பங்களிப்புக்கள் ஏராளம். எனினும் சில குறிப்பட்ட வற்றை மாத்திரம் கூறலாம் என கருதுகின்றேன். அதாவது தம் மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. சகாதார மருத்துவ நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கி வைத்தல். 

கம்பஹா மாவட்டத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு தேவையான கட்டிட வசதி மற்றும் உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தல், தேவையான இடங்களில் மின் கம்பங்களை மாற்றி புதிய மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சிறுவர் சாரக மத்திய நிலையத்திய ஸ்தலத்திற்கு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தல் ,முஸ்லிம் கிராமங்களிலுள்ள பாதைகளில் இரு புறம் அமைந்துள்ள வடிகான்களை அகலாமாக்கி வடிகால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், நீர் கொழும்பு அல் பலாஹ் மஹா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்தல், நீர் கொழும்பு அல் ஹிலால் மத்திய மஹா வித்தியாலயத்திற்கு அவ்வப்போது தேவையான மரத்தளபாடங்களைப் பெற்றுக் கொடுத்தல், கம்பஹா மாவட்டத்திலுள்ள அஹதிய்யாப் பாடசாலைகளுக்கும் தேவையான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், இம்மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு கூரைத் தகடுகள் பெற்றுக் கொடுத்தல், தொழில் பயிற்சி பெற்ற பெண்களுக்களுக்கு தையல் இயந்திரம் பெற்றுக் கொடுத்தல், பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தல், அரபுக் கல்லூரிகளுக்குத் தேவையான உபகரணங்கள் பெற்றுக் கெகடுத்தல், நூலகம் அபிவிருத்தி செய்தல்.

 நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சில பாடசாலைகளுக்கு பதிய வகுப்பறைக் கட்டிட நிர்மாணப் பணிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வருமானம் குறைந்து குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளையும் மலசல கூடங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தல், மீன்பிடித் தொழிலாளர்களுக்குத் தேவையான வசகதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வயது முதிர்ந்தவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடி பெற்றுக் கொடுத்தல், வலது குறைந்தவர்களுக்கு முச்சக்ர நாற்காலிகள் வழங்குதல், கலைஞர்களுக்கு நிதி உதவி பெற்றுக் கொடுத்தல், நீர்கொழும்பு நகரசபை எல்லைக்குட்பட்ட சிறுவர் பராமரிப்பு சிகிச்சை நிலையத்துக்குத் தேவையான இலக்ட்ரோனிக் நிலுவைகள் பெற்றுக்கொடுத்தல் அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலயத்தில் இருமாடிக்கட்டடத்தில் முதலாம் கட்டத்தை நிறைவு செய்தல தேவையான உபகரணங்கள் பெற்றுக்கொடுத்தல்; அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலயத்தில் இருமாடிக்கட்டடத்தில் முதலாம் கட்டத்தை நிறைவு செய்தல தேவையான உபகரணங்கள் பெற்றுக்கொடுத்தல்; ; நோயாளிகள், விதவை, தகப்பன் நீண்டகாலமாக சிறைசென்றவர்களின் குழந்தைகளுக்கு மாதாமாதம் 33 குடும்பங்களுக்கு படிப்புச்செலவுக்காக நிதியுதவி பெற்றுக்கொடுத்தல வருமானம் குறைந்த கண்பார்வை குறைந்தவருககு டநளெ பெற்றுக்கொடுத்தமை குறைந்த வருமானம் பெறும் மனநோயாளிகள், சுயநினைவற்றவர்கள் கொண்ட 5 குடும்பங்களுக்கு போசனை, மருத்துவ நிதி உதவிகள் பெற்றுக்கொடுத்தல்.

தாய் சேய் மருத்து நிலையம் பாடசாலைக் கட்டடவசதிககள். கொங்கீரிட் வீதி. தார் வீதி, மின்விநியோகம்,, நீர் வசதிகள் போன்ற சகல கிராமங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். இ;ன்னொரன்ன ஏராளமான சேவைகளை முஸ்லிம் சமூகத்தினுடைய மக்கள் பிரதிநிதியாக செய்யக்கிடத்தமையிட்டு நான் ஓரளவு மனத்திருப்தி அடைகின்றேன். இவ்வாறு இந்தப் பணிகளை எமது சமூகத்திற்காக ஏதாவது இன்னும் செய்யவேண்டுமெனில் எமது பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுதல் வேண்டும்.
நீங்கள் மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் வெற்றி வெற்றால் ஆற்றக் கூடிய பங்களிப்பு என்ன?

கம்பஹா மாட்டத்திலுள்ள முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் செயற் திட்டங்கள் வகுத்து அவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்க வேண்டும் இன்றைய எமது சந்ததியினரே நாளை தலைவராகளாகவும் துறை சார் வல்லுநர்களாகவும் உருவெடுத்து வருகின்றனர். ஆனால் எமது முஸ்லிம் சமூக இளைஞர் யுவதிகளைப் பொறுத்தவரையில் தொழில் சார் கல்வித் துறையில் பாரிய பின்னடைவைக் கொண்டுள்ளனர். 

தம் இளைஞர்கள் அருகில் துறை சார் தொழில் நுட்ப கற்கை நெறிப் பாடங்கள் நடந்த போதிலும் கூட அவர்கள் அது என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள மாட்டார்கள், இந்த இடங்களுக்கு தொலை தூர இடங்களிலிருந்து இளைஞர் யுவதிகள் படை எடுத்து வருவார்கள். எமது சமூக இளைஞர் க. பொ. த. சாதாரண தரம் கல்வியை முடித்தவுடன் முச்க்கர வண்டி ஓட்டுவதற்கும், வெளிநாடுகளுக்குச் செல்லவே முற்படுகின்றனர். 

வெளிநாடுகள் செல்வதாயினும் முறை சாரா தொழில் நுட்பவியலான கல்வியைக் கற்றுச் செல்லும் பழக்கம் இன்னும் வரவில்லை. இவர்கள் வெளிநாடுகள் சென்றால் மிகக் குறைந்த சம்பளத்திற்கே தொழில் புரிய வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடைய எதிர்கால வேலையுலகிற்கு தயார் படுத்த வேண்டி இருக்கிறது. தத்தம் தம் கல்வித் தகைமைக்கு ஏற்ப பொருத்தமான தொழில் பயிற்சி ஒன்றை வழங்குவதற்குரிய செயற்திட்ட வேலைப்பாடுகளை உருவாக்கி நம்பிக்கை மிகு முஸ்லிம் இளைஞர் யுவதிகளை கம்பஹா மாவட்டத்தில் உருவாக்குதல் வேண்டும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :