சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த விஷேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள்



ஏ.ஜே.எம்.ஹனீபா-

லங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தையிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த விஷேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் மற்றும் சுயதொழில் முயற்சிக்கான காசோலை என்பன வழங்கும் நிகழ்வு இன்று (04) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் அதீதிகளாக கலந்த கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட,; உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச செயலாளர் எ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், அம்பாறை மாவாட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிஷhந்த சந்திரசேகர, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க, ஆகியோர் விNஷட தேவையுடையவர்களுக்குரிய பொருட்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் போது 08 பேருக்கு சக்கர நாற்காலிகளும், 02பேருக்கு ஊன்றுகோலும், 01வருக்கு சுயதொழில் முயற்சிக்கான இருபதாயிரம் பெறுமதியான காசோலையம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :