முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது - சங்கரத்ன தேரர்



ல்முனை வாழ் தமிழ் மக்களின் எல்லைகளை பாதுகாப்பதில் நான் உறுதியாகவுள்ளேன் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையினால் கல்முனை தரவைப் பிள்ளையார் வீதியினை கடற்கரைப்பள்ளி வீதியென பேர் மாற்றுவதற்கான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனையில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர்களான எம். இராஜேஸ்வரன், ரி. கலையரசன், மாநகர சபை உறுப்பினர்களான ஏ. விஜயரெட்ணம், எஸ். ஜெயக்குமார், கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஹென்றி மகேந்திரன், இலங்கை தமிழரசுக்கட்சி மூத்த உறுப்பினர் கே. ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவுற்று அமைதியாக மூவின மக்களும் வாழ்ந்து வருகின்ற இவ்வேளையில், இவ் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் சில அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

குறிப்பாக கல்முனை வாழ் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்கு எதிராகவும் அவர்களது பூர்வீக வீதிகளின் பெயர்களையும் மாற்றுவதற்கு எதிராக திட்டமிட்ட வகையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் குழப்பம் விளைவிக்க முற்படுகின்றனர். இது கண்டிக்கத்தக்க செயலாகும்.

கல்முனையில் ஏற்கெனவே அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்முனை தரவைப்பிள்ளையார் கோவில் வீதியின் பெயரை கடற்கரைப்பள்ளி வீதியென பெயர் மாற்றுவதற்கு மேயரினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை தொடர்பில் இன்று தமிழ் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

கல்முனையில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலையில் திடீரென வீதிக்கு பெயர் மாற்றக் காரணம் என்ன? கல்முனையில் மக்களுக்காகச் செய்ய வேண்டிய எவ்வளவோ அபிவிருத்திப் பணிகள் இருக்கின்றபோது மாநகர சபையினால் வீதிக்கு பெயர் மாற்றுகின்ற வேலைதான் முக்கியமாகப் போய்விட்டதா?

இன்று கல்முனையில் தமிழ் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயேயுள்ளனர். இக்கிராமங்களில் போதியளவு அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படாதது கவலையளிக்கின்றது.

கல்முனையைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கும் சரி இங்குள்ள சிங்கள மக்களுக்கும் சரி உரிமையில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. நாம் இரண்டாம் தரப்பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றோம்.

கல்முனை வாழ் தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உடனடியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி இம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தால் இப்பகுதி தமிழ் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கும் அவரது கட்சிக்கும் என்றும் கிடைக்கும் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :