மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சிணை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் - ஜுனைட்நளீமி


ட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் முஸ்லிம்களது காணிப்பிரச்சிணைகளைத்தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறிப்பாக கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதே செயலக எல்லைக்குள் பல தசாப்தங்களாக வசித்துவரும் எல்லைப்புற மற்றும் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கான காணி உத்தரவுப்பத்திரம் இதுவரை காலமும் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச்செய்யப்பட்டுவருவதை வன்மையாக கண்டிக்கின்றேன். 

குறிப்பாக அன்மையில் பொதுமக்களுக்காக வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டு பின்னர் இடைநிறுத்திவைக்கப்பட்ட 1712 காணி ஒப்பங்கள் மாகாண காணி ஆணையாளரின் பணிப்புறையின் பெயரில் பொதுமக்களுக்கு உறிய காலத்தில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இப்பிரதேச செயலகங்களில் இருந்து கைப்பற்றி கொண்டு செல்லப்பட்டது யாவரும் அறிந்ததே. 

இவற்றுக்குப்பின்னால் பல்வேறு அரசியல் கானப்பட்ட போதும் இதனால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பது காணியற்ற மீள்குடியேற்ற வாசிகளே. கடந்த காலங்களில் முஸ்லிம் பிரதேசங்கள் தவிர்த்து தமிழ் பிரதேசங்களில் காணி அநுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும் அதிகாரிகள் மீதான அவநம்பிக்கையினையும் ஏற்படுத்தியுள்ளது. 

பாதிப்படைந்த எந்தவொரு இன மக்களானாலும் உரிய நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும். இந்தவகையில் தமிழ் சகோதர இன மக்களுக்கு வழங்கப்பட்டது ஒன்றும் பிழையான விடயமல்ல. அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையாகும். மறுபுரம் முஸ்லிம் மக்களது பிரச்சிணை தொடர்பில் இன்னும் இத்தகைய இழுத்தடிப்புக்கள் வேதனையளிப்பதாக அமைகின்றது. 

கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்ற நிலைமையாக இப்பத்திரங்கள் மீளப்பறப்பட்டமை அமைந்துள்ளது. எனவே இவ்விடயங்களில் ஏதாவது ஊழல் அல்லது குளருபடிகள் இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு இவ்விடயத்தை ஜனரஞ்சகப்படுத்துவதற்கு மக்கள் மேற்கொண்ட அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையினை நேரில் வந்து களந்தாலோசித்து பூரன தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாக எமது மாவட்டச்செயலாளர் உறுதிமொழி அழித்திருப்ப்தனை நன்றி கூறுகின்றேன்.

 அவரது சிறந்த நிர்வாகச்செயற்பாட்டின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட காணி அநுமதிப்பத்திரங்கள் உறியவர்களுக்கு விரைவில் கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்விடயத்தில் மாவட்டத்தில் கானப்படும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது பங்களிப்பினை செய்ய வேண்டும் என்றும் பாதிப்படைந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :