உலக தரிசன நிறுவனத்தின் 3.4 மில்லியன் செலவில் புதிய வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா



எம்.முஹம்மட் ஜஹான்-


ஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கஸ்டப் பிரதேசமான மத்தியமுகாம் றாணமடுவில் உருவாக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையான கமுஃசதுஃஅகத்தியர் வித்தியாலயத்தில் உலக தரிசன நிறுவனத்தின் 3.4 மில்லியன் நிதி உதவியுன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கமுஃசதுஃஅகத்தியர் வித்தியாலய அதிபர் ஐ.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் டி.சுதன், சம்மாந்துறை வலய கல்வி பிரதிப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.செல்வநாதன், முன்னாள் நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.விநாயகப்பிள்ளை உலக தரிசன நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சதீஸ், திட்ட இணைப்பாளர் றொபின்சன், பெற்றோர்கள், மாணவர்கள், அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இதுவரை காலமும் மத்தியமுகாம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இயங்கி வந்தமை குறிப்பிட்டதக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :