பொருட்களின் விலை ஏற்றத்திற்கு அரசாங்கம் பொறுப்பல்ல என தொடர்ந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறி வருவதால் அது தொடர்பில் விவாதிப்பதற்கு பகிரங்கமான விவாதமொன்றுக்கு வருமாறு காத்தான்குடி நகர சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் இன்று (5.2.2014) புதன்கழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை குறுஞ்செய்தி யொன்றின்(எஸ்.எம்.எஸ்.) மூலம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் விடுத்துள்ளார்.
அவர் அனுப்பிய அந்த குறுஞ்செய்தியினை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதால் அதை மக்களுக்காக பிரசுரிக்கின்றோம்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அன்புடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு……
பொருட்களின் விலை ஏற்றத்துக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்ற கருத்தை அப்பாவி ஏழை மக்கள் முன்பாக நீங்கள் தொடர்ந்து கூறி வருகின்றீர்கள்.
உங்களின் இக் கருத்து அப்பட்டமான பொய்யாகும்.
உங்களின் வார்த்தைகளை அப்பாவித்தனமாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக் கூடாது.
உங்களின் இக் கருத்து தொடர்பாக தேசிய ஊடகமொன்றில் (தொலைக்காட்சி, வாணொலி) அல்லது பொருத்தமான ஒரு வழிமுறையில் உங்களோடு பகிரங்கமாக விவாதிப்பதற்கு உங்களை நான் பகிரங்கமாக அழைக்கின்றேன்.
நீங்கள் தயாரா?
உங்களின் பதிலை மூன்று நாட்களுக்குள் எதிர் பார்க்கின்றேன் என பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அதில் குறிப்பிட்டுன்ளார்.
அவர் அனுப்பியுள்ள ஆங்கிலத்திலான குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.)யையும் இத்தால் பிரசுரிக்கின்றோம்.
Dear Dpy.Min.Hisbulla, you are continuously saying in front of poor and innocent people that “Govt is NOT responsible for food price increases”. Its an utter lie and don’t continue to cheat the people who still innocently believe in your words. I would like to openly invite you for a public debate on this topic on a national media ( TV or Radio) or any other suitable national/local platform. Are you ready? Look forward to getting your reply within 3 days. Engr. Abdur Rahman

0 comments :
Post a Comment