இலங்கையில் மர்மநோயை பரப்பியதாக ஐநா அமைப்பு மீது குற்றச்சாட்டு

ர்மமான சிறுநீரக நோய் ஒன்று இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கு பரவக் காரணமாக இருந்ததாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மீது இலங்கையின் சிவில் சமூக அமைப்பு ஒன்று புகார் செய்துள்ளது.

பல்தேசிய நிறுவனங்களின் சார்பில் ஐநா உணவு மற்றும் விவசாய நிறுவனம், விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனையை ஊக்குவித்ததாக வளர்ச்சிக்கான செயற்பாட்டுக் குழுவான The Swarna Hansa Foundation என்னும் அமைப்பு கூறுகிறது.

அதன் விஷத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

ஐநா உணவு மற்றும் விவசாய நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

மூன்று வகையான இரசாயனங்களை தாம் தடைசெய்துள்ளதாக இலங்கை விவசாய அமைச்சு பிபிசியிடம் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :