கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசஹிப் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பொருட்டு,
இன்று காலை (08.11.2013) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ராஜினாமா கடிதத்தை கையளித்தார். என இம்போட்மிரர் இணையத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
இதன்போது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கட்சியின் உத்தரவை ஏற்று தனது ராஜினாமாவை செய்தமைக்காக சிராஸிக்கு பாராட்டு தெரிவித்ததோடு கட்சியில் அவரது கண்ணியத்திற்க்கும், கெளரவத்திற்கும் தான் உறுயளிப்பதாக தெரிவித்தார்.
இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் சிராஸ் மீராசாஹிப் அவர்களும் கைலாகு கொடுத்து ”முஷாபஹா” செய்து கொண்டனர் என்றும், சிராஸ் மீராசாஹிபின் ராஜினாமா தொடர்பாகவும் எதிர்கால கல்முனை மாநகரசபை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று சிராஸ்மீராசாஹிப், நிசாம் காரியப்பர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் அன்சில் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment