பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு சென்னையில் இன்று மாலை காலமானார். பைவ் ஸ்டார், ஒற்றன், பாய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு.

இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ் ஆபரேஷன்’ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்கவில்லை. சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி நடிகர் சிட்டி பாபு திடீர் என்று மயங்கி விழுந்தார்.

கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது. சுய நினைவை இழந்து, கோமாவில் சிட்டிபாபு இருப்பதாகவும், அவரது மூளையில் கட்டி இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (8ஆம் தேதி) மாலை நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு காலமானார். அவரது உடல் அவரது சொந்த வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :