என்னையும் தலைவரையும் துாரப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். - சிராஸ்

-எஸ்.அஷ்ரப்கான் -
ல்முனை மாநகர மேயர் பதவியி­லிருந்து கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று (08) காலை இராஜினாமாச்செய்துள்ளார்.

இன்று காலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்­தித்த சிராஸ் மீரா சாஹிப் தனது இராஜினாமாக்கடிதத்தை கையளித்ததாகவும் இருவரும் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி முஸாபஹா செய்து கொண்டதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் இடம்பெற்ற விசேடஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான றவூப் ஹக்கிமினால் கல்முனை மாநகர சபையின் 2 வருடங்களுக்குமான புதிய மேயராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமிக்கப்படஉள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் பிரதி மேயர் விடயம் தொடர்பாக கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

இதுவிடயமாக ஊடகவியலாளர் மாநட்டில் நீதியமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிடும்போது,

உண்மையில் கட்சியின் நலனை கருத்தில் கொண்டே இந்த விடயம் எம்மால் உறுதியாக கொண்டுவரப்பட்டது. இந்த முதல்வர் விடயத்தை வைத்துக்கொண்டு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டனர். 

தலைவர் என்ற ரீதியில் உண்மையில் கட்சியின் நலனுக்காகவும், கட்சியைப்பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவுமே இந்த நிலைமைக்கு காரணமாகும். என்றும் கட்சியில் உள்ள எமது உறுப்பினர்கள் எல்லோரையும் சமமாக பார்ப்பதிலும், வழிநடாத்துவதிலும் நான் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை. அந்த வகையில் ஸிராஸ் மீராசாஹிபினுடைய கட்சி நலனிலும் நாம் அக்கறையோடு செயற்படுவோம் என்றார்.

கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் இது விடயமாக கருத்து வெளியிடுகையில்,

நான் இந்த விடயத்தில் தவறாக வழிநடத்தப்பட்டேன். ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போன்று நான் முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யமாட்டேன் என்று கூறவில்லை. ஆனால் அதற்கான அவகாசத்தையே தலைவரிடம் வேண்டினேன். 

ஆனால் தற்போது எமது கட்சியின் நலன், மக்களின் எதிர்கால நலன் என்பவற்றைக்கருத்தில் கொண்டே நான் இந்த முடிவினை எடுத்திருக்கின்றேன். நான் கட்சியையும், கட்சியின் தலைவரையும் நன்கு மதிப்பவன் என்னை கட்சியிலிருந்து துாரப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். என்றும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸனலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏம்.எல். எம். நஸீர், வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சாய்ந்தமருது மத்திய குழுச்செயலாளருமான ஏ.ஜலால்டீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :