ஹையான் சூறாவளியால் 1200 பேர் பலி - மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக் கடந்து சென்றது. மணிக்கு 235 முதல் 275 கிலோ மீற்றர் வேகத்தில் நேற்று கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

ஆனால் எதிர்பார்க்கப்பட்டதனை விட வேகமாக மணிக்கு 315 கி.மீற்றர் வேகத்தில் ஹையான் சூறாவளி நேற்று காலை தாக்கியுள்ளது. இவ்வாண்டின் சக்திவாய்ந்த ஹையான் சூறாவளியானது இதுவரையில் கணக்கிடப்பட்ட சூறாவளிகளில் சக்திவாய்ந்தது எனவும் கூறப்படுகிறது.

இச்சூறாவளியில் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :