பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து சத்யசேனா அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து சத்யசேனா அமைப்பினர், இன்று முற்பகலில் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். அதேவேளை, தாம்பரத்தில் மின்சார ரயிலை மறித்து போராட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் முற்போக்கு இயக்கத்தினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment