அட்டாளைச்சேனை மாக்ஸ்மன் விளையாட்டுக் கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு



(எம்.பைஷல் இஸ்மாயில்)

ட்டாளைச்சேனை மாக்ஸ்மன் விளையாட்டுக் கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அம்பாறை மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிறிகெட் சுற்றுப்போட்டியில் ஒலுவில் ரீமாஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.

அணிக்கு 07 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெற்ற இப்போட்டிக்கு 34 விளையாட்டுக் கழகங்கள் பங்கெற்று அதன் இறுதிச் சுற்றுக்கு ஒலுவில் ரீமாஸ் கழகமும், அட்டாளைச்சேனை சோபர் கழகமும் தெரிவாகியது.

மாக்ஸ்மன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று மாலை (09) சனிக்கிழமை சின்னப் பாலமுனை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் 03 ஆவது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி கேணல் ஹரீன் வீரசிங்க, மீலாத் நகர் அல் ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.முஹம்மட் றியாஸ் மற்றும் அட்டாளைச்சேனை அணைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ் அகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இச்சுற்றின் இறுதிப் போட்டிக்கு தெரிவான ஒலுவில் ரீமாஸ் கழகமும், அட்டாளைச்சேனை சோபர் கழகமும் மோதிக் கொண்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஒலுவில் ரீமாஸ் அணியினர் 05 ஓவர் முடிவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரீ.எம்.றிஸ்னி 58 ஓட்டங்களை பெற்று கொடுத்து இச்சுற்றின் ஆட்ட நாயகனாக தெரிவானார். ஏ.எச்.சிபான் ஒரு ஓவர் பந்து வீச்சுக்கு 01 ஓட்டத்தைக் கொடுத்து 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை சோபர் அணியினர் 05 ஓவர் முடிவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 35 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதில் வெற்றிபெற்ற ஒலுவில் ரீமாஸ் அணியிக்குரிய கிண்ணத்தை  பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை இராணுவத்தின் 03 ஆவது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி கேணல் ஹரீன் வீரசிங்க அணியின் தலைவரிடம் வழங்கி வைத்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :