ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் அமைச்சுக்கு ஆப்பு -திவயின

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பதவி பறிபோகக் கூடுமென சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சிறுபான்மை கட்சித் தலைவர் ஒருவரின் அமைச்சுப் பதவி பறி போகலாம் என தெரிவித்துள்ளது. 

ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. இதேவேளை, மாகாணசபைத் தேர்தல்களின் நிறைவில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாகாணசைபைத் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக கட்சியின் சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் இவர்களுக்கு அமைச்சு அல்லது பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :