ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த இப்தார் நிகழ்வு முதற் தடவையாக இந்த வருடம் கண்டியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஜனாதிபதிக்கு முஸ்லிம் பிரமுகர்களும் உலமாக்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment