ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கம்பஹா மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவுக்குமிடையில் வெள்ளிக்கிழமை மாலை இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல மணிநேரம் மிக இரகசியமான முறையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவருக்குமிடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
நுகோகொடையிலுள்ள நாலாந்திர ராமய விஹாரையில் விஹாராதிபதி தீனியாவல தேரர் முன்னிலையில் மூடிய அறைக்குள் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான கரு ஜயசூரியவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் ஓரளவு தீர்வுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களின் பிரசார நடவடிக்கைகளின் பொறுப்பை கரு ஜயசூரியவிடம் ஒப்படைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார். கட்சியிலுள்ள அனைவரும் ஒற்றுமைப்படல் மற்றும் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கல் போன்ற விடயங்களை கருஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிக்குள் தொடர்ந்து நாம் சண்டையிட்ட போதும். இவற்றையெல்லாம் நிறுத்தி விட்டு இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த ஆட்சியொன்றை வழங்குவதற்கு பாடுபடுவதே அவசியம் என்றும் கரு சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கருஜயசூரியவுக்குமடையிலே ஒரு கட்சி அரசியல் முரண்பாடு காணப்பட்டு வந்த நிலையிலே இந்தச் சந்திப்பு திடீரென இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பை மலிக் சமரவிக்கிரம ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்பின் பின்னர் கருஜயசூரிய ஊடகவியலாளரைச் சந்தித்து கருத்தும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment