இலங்கையில் தனது பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த நினைக்கும் மாலைதீவு

மாலைதீவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதனைத் தடுக்கும் பொருட்டு இலங்கையில் தனது பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்துவது குறித்து மாலைதீவு அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

மாலைதீவுகள் பொலிஸ் ஆணையாளர் அப்துல்லா றியாஸ் மாலைதீவு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் மாலைதீவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு மாலைதீவு பொலிஸ் அதிகாரிகளை அயல் நாடுகளில் நிலைகொள்ளச் செய்வதற்கான தேவைப்பாடு குறித்து வலியுறுத்தியுள்ளார்.

மாலைதீவில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் கடத்தலில் வெளிநாட்டவர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருவதனைச் சுட்டிக் காட்டிய றியாஸ் நாட்டிற்குள் போதைப் பொருட்கள் அபரிமிதமாகக் கொண்டு வரப்படுவதனைத் தடுக்கும் வகையில் மாலைதீவு பொலிஸார் அண்டை நாடுகளில் சேவையாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்தியா அல்லது இலங்கையிலிருந்தே போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருகின்றது. அதனைத் தடுக்கும் பொருட்டு எமது பொலிஸ் படையணி இந்தியாவிலும் இலங்கையிலும் நிலை கொண்டிருப்பது அவசியமாகுமெனவும் றியாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :