குடிப்பதற்கு சுத்தமான குடிநீரைக் கேட்டுப் போராட வேண்டிய அவலத்துக்குள்ளான மக்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் துப்பாக்கிக் குண்டுகளைப் பரிசளித்துள்ளது. உலகத்தில் வேறு எங்குமே இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றதில்லை.
வெலிவேரிய பகுதியில் இராணுவம் நடத்திய அராஜகத்தை கண்டு நாம் மட்டுமல்ல சர்வதேசமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க.வின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
மத்திய மாகாண சபைத்தேர்தலில் மாத்தளை மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் சனிக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் வஸந்த அலுவிகாரவின் இல்லத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுமார் ஆயிரம் பேர் வரையிலான கட்சி ஆதரவாளர்கள் திரண்டிருந்த இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் தொடர்ந்தும் பேசுகையில்,
மத்திய மாகாண தேர்தல் முடிவுகளே இந்த அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது. இது சாதாரண மாகாண சபைத் தேர்தல் அல்ல.
இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஒரு தேர்தலே இதுவாகும். ஒரே நாளில் நடந்து முடிக்கவிருந்த தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்தி ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசு உயர்த்தி வருகிறது.

உணவுப் பண்டங்களுக்கு அதி உயர்ந்த வரியை அறவிடும் ஒரே நாடு இலங்கையே. ரின் மீனுக்கு 100சதவீத வரி, பருப்புக்கு 22 சதவீத வரி, கருவாட்டுக்கு 75 சதவீத வரி என எல்லா உணவுப் பண்டங்களுக்குமே எக்கச்சக்கமான வரி அறவிடப்படுகிறது. இந்த நாடு அந்நிய நாடுகளிடம் பெற்றிருக்கும் கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே ஒவ்வொரு குடிமகனும் மூன்று இலட்சம் ரூபாவைச் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது மிகக் கூடுதலான இராணுவ வீரர்களைப் போருக்கு அனுப்பி வைத்தது வெலிவேரிய பிரதேசமே. அந்த வீரர்கள் பெற்றுக்கொடுத்த வெற்றியை வியாபாரப் பண்டமாக மாற்றி அரசு தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

சிவில் நிர்வாகம் நடைபெற்று வந்த வெலிவேரிய பகுதி மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வேண்டுமென போராட முன்வந்த போது இராணுவத்தை அனுப்பி அராஜகம் நடத்தியுள்ளது. அங்கு மட்டுமல்ல முழு நாடுமே இன்று சிவில் நிர்வாகத்தை இழந்து இராணுவ ஆட்சிக்குக்கீழேயே இயக்கப்பட்டு வருகிறது.
கப்பல் இல்லாத துறைமுகம், விமானம் இல்லாத விமானத்தளம் எல்லாமே இங்குதான் இருக்கிறது. நாட்டில் சட்டம் ஒழுங்கு அனைத்தும் சீர்குலைந்து போயுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் பணத்திற்காக கொலை செய்கிறார்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள்.

பால் மணம் மாறா பச்சை குழந்தைகளும் கூட கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. எங்கும் அராஜகம் எவருக்கும் தட்டிக்கேட்க முடியாது நமக்குத் தேவை நாட்டில் ஊழல் இல்லாத ஒரு ஜனநாயக ஆட்சி அத்தகைய ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இதுவல்ல. என்றாலும் அரசுக்கு ஒரு செய்தியை இத்தேர்தல் முடிவு வழங்க வேண்டும். எனக்குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment