முஸ்லிம்கள் சதிவலையில் சிக்கிவிடக் கூடாது - ஏ.சீ.யஹியாகான்


திகாரர்களின் வலையில் இந்நாட்டு முஸ்லிம் மக்கள் சிக்கிவிடக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளர் ஏ.சீ.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளர் யஹியாகானின் காரியாலயத்தில் கட்சி அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்நாட்டிலே மிகவும் கொடூரமான உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இங்கு வாழ்கின்ற அனைவரும் நல்ல முறையில் சமாதான காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், ஒரு சாரார் மதத்தின் பெயரால் சமூகங்களை குழப்பி மீண்டும் இந்நாட்டு மக்களை நிம்மதியில்லாமல் செய்ய வேண்டுமென்ற வேலையில் சில பேரினவாத அமைப்புக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

இது போன்ற நடவடிக்கைகளில் எச்சமூகத்தினர் ஈடுபட்டாலும் அது கண்டிக்கப்படவேண்டும் என்றார். மேலும் இப் பேரினவாத அமைப்புக்கள் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் சமூகத்திற்காக பாடுபடுகின்ற முஸ்லிம் அரசியல் வாதிகளோ, முஸ்லிம் தலைவர்களோ இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

மேலும் சில்லரை அமைப்புக்களுக்கெல்லாம்; ஒருபோதும் நாங்கள் பயப்படப்போவதுமில்லை, கணக்கெடுக்கப் போவதுமில்லை அத்தோடு முஸ்லிம் மக்களுடைய அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயங்களைப் பேசுவதற்கு உங்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது.

எங்களுடைய மார்க்கம் எங்களை அழகான முறையில் வழிநடாத்திக் கொண்டிருக்கின்றது. அத்தோடு எங்கள் மார்க்கம் நாட்டையும், அந்நிய மதத்தவர்களையும் மதித்து நடக்க வேண்டுமென்றும் கற்றுத்தந்திருக்கின்றது.

ஆகவே குறுகிய இலாபங்களுக்காக மதத்தின் பெயரால் மக்களை குழப்பாமல் எதிர்கால சந்ததியினர் சமாதானத்துடன் வாழ சிறந்த முன்மாதிரியாக திகழவேண்டும் என்றார்.

மேலும் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், எமது கட்சி தலைமையும் எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மிக நுனுக்கமாக ஆராய்ந்து சரியான நேரத்தில் சரியான வேலைகளைக் செய்து கொண்டிருக்கின்றது என்பதை இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்துகின்றோம்.

ஆகவே சதிகாரர்களின் வலையில் முஸ்லிம் மக்கள் சிக்கிவிடாது எதிர்கால சந்ததியினருக்காக பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
(அத)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :