இலங்கையின் உயர்நீதிமன்றத்தை கோத்தபாய தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்.

லங்கையின் உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஆங்கில செய்தி இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது பிரதம நீதியரசராக உள்ள மொஹான் பீரிஸ் முன்னர், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசராக செயற்பட்டு வந்தார். இந்தநிலையில் அவரை பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ச நீதித்துறையை குறிப்பாக உயர்நீதிமன்றத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புகைப்பிடித்தல் நிறுவன வழக்கு ஒன்று அண்மையில் இடம்பெற்றபோது கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸே குறித்த நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணிகளை நியமித்துள்ளார். அத்துடன் அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளின் போது மொஹான் பீரிஸும் கோத்தபாய ராஜபக்சவும் சந்திப்புக்களை ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்தமை மற்றும் அதற்காக புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை நியமித்தமை என்பன கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே இடம்பெற்றதாக ஆங்கில இணையச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :