வட மத்திய மாகாண சுகாதார திணைக்கள சாரதி ஒருவர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அநுராதபுரம் மாவட்ட அனைத்து அரச சுகாதார அலுவலக அம்புலன்ஸ் சாரதிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்புலன்ஸ் சாரதியாக தனக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்து தற்போது அந்த வாய்ப்பு இல்லாது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (15) பகல் தொடக்கம் வட மத்திய மாகாண சுகாதார திணைக்கள சாரதி ஒருவர் அநுராதபுரம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக கூரைமீது ஏறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
வட மத்திய மாகாண அம்புலன்ஸ் சாரதிகள் தெரிவுக்கு நடந்த நேர்முகப் பரீட்சையில் தான் அதிக புள்ளிகளைப் பெற்றதாகவும் ஆனால் அதிகாரம் படைத்தவர்கள் குறைந்த புள்ளிகளை பெற்றவருக்கு அப்பதவியை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இது குறித்து 5 மாதங்களாக அதிகாரிகளுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கூறுகிறார்.
எனவே குறித்த நபருக்கு நியாயம் வழங்குமாறு அநுராதபுரம் மாவட்ட சுகாதார அலுவலக அனைத்து அம்புலன்ஸ் சாரதிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.AD

0 comments :
Post a Comment