சமய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை, சமய தளங்களைத் தாக்குவது குற்றமாகும் – அமைச்சர் வாசுதேவ

ந்த நிலைமையின் கீழாயினும் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கூட்டத்தினரையும் மற்றும் அவர்கள் இருந்த இடத்தையும் தாக்குவது பாரதூரமான குற்றமாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணி செயலாளரும், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிரான்பாஸ் பொலிஸ் பிரிவில் பலாமரச் சந்திக்கு அண்மையிலுள்ள சுவர்ண சைத்திய மாவத்தையில் பழைய முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ளது. இப்பகுதியைச் சூழ அதிகமாக முஸ்லிம் மக்களும்,சிங்கள பௌத்த மக்களும் வசிக்கின்றனர்.

முஸ்லிம் மக்களால் புதிய கட்டடம் ஒன்றினை அந்த இடத்துக்கு அருகாமையில் நிர்மாணித்ததன் பின்பு அதை சமய வழிபாடுகளுக்கான இடமாகப் பயன்படுத்துவதற்கு முஸ்லிம் மக்கள் கருதியுள்ளனர். முஸ்லிம் பள்ளிக்கு அருகாமையில் பௌத்தர்களின் வழிபாட்டுத் தளமான பௌத்த விகாரை ஒன்றும் உள்ளது.

பழைய முஸ்லிம் பள்ளி இருக்கும்போது இரண்டாவது முஸ்லிம் சமய வழிபாட்டுத் தளம் ஒன்றை அமைப்பதற்கு பிரதேசத்திலுள்ள சில சிங்கள பௌத்த மக்கள் மற்றும் விகாரையின் பௌத்த மத குருவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக தீர்வொன்று காண்பதற்கு இரு சாராருக்குமிடையில் ஒத்துழைப்பும் இணக்கப்பாடும் ஏற்பட்டுள்ளதென அறிய வருகின்றது.

இந்த இடம் தொடர்பாக ஏற்பட்ட புதிய தகராரினை அடிப்படையாக வைத்து சிறு குழு ஒன்று புதிய கட்டடத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த கூட்டத்தினரையும் அந்த இடத்தினையும் தாக்கியுள்ளனர். மேலும், முஸ்லிம் மக்கள் பலரது வீடுகளையும் தாக்கியுள்ளனர் என அறியப்படுகின்றது.

இந்த நிலைமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர் நடவடிக்கை ஊடாக இரு பிரிவினருக்குரிய மக்களும் அந்த இடத்தில் கூடியுள்ளனர். இரு சாராரும் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைமைக்கு வந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் மிகவும் சிரமப்பட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில் சமய வழிபாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டு புதிய கட்டடத்தில் இருந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் உட்பட சுமார் 150 பேர்கள் பொலிஸாரினால் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

பின்னர், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தினை அமுல்படுத்தி கூட்டத்தினரைக் கலைந்து போகச் செய்ததன் ஊடாக ஏற்பட இருந்து மோசமான நிலைமையினைத் தவிர்த்துள்ளனர்.

எப்படியாயினும் எந்த நிலைமையின் கீழாயினும் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கூட்டத்தினரையும் மற்றும் அவர்கள் இருந்த இடத்தையும் தாக்குவது பாரதூரமான குற்றமாகும்.

எனக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய அந்தத் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு விகாரையின் மதகுருவும் கூட முயற்சி எடுத்துள்ளார். பிரச்சினைகள் மீண்டும் ஏற்படுமாயின் அதை பாதுகாப்பு பிரிவுக்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு முன்வைத்து மீண்டும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பதிலாக சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டு தாக்குதலைத் தொடங்கிய சிறு கூட்டத்தினரால் செய்யப்பட்ட அநியாயம் பற்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தற்போது பாதுகாப்பு அமைச்சு தலையிட்டு ஏற்படுத்திய பேச்சுவார்த்தையின் பின் பிரச்சினைக்கு ஏதோவொரு தீர்வினை ஏற்படுத்தியள்ளதாக அறிய வருகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படாதிருப்பதற்காக சட்ட விரோத செயல்கள் ஏற்படுவதற்கு முன் அவ்விடங்களுக்கு அரசாங்கம் ஈடுபட்டு நிலைமைகளை சீராக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதோடு, அதேபோன்று அதற்குத் தேவையான தகவல்களளை அரசின் நுண்ணறிவுப் பிரிவின் மூலம் சரியான முறையில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். MP
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :